வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ள எட்னா எரிமலை!!(வீடியோ)

399

இத்தாலி நாட்டின் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்புக்குழம்பு வெளிப்பட்டு வழிந்து வருகிறது.

எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எரிமலை சாம்பல் பறப்பது அப்பகுதியில் விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் என்றாலும், காடானியா விமான நிலையம் வழக்கம் போல இயங்குகிறது.

எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் இதனால் மலைச் சரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3330 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை தான் ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான எரிமலையாகும். 1992 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்துச் சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.