வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

209

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில், எந்த வித பத்திரங்களுமின்றி மது போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 16 ஆயிரத்து 500 ரூபாவும், அதேபோன்று மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஆபத்தான முறையில்லை மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாவினையும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி, வருமானவரி பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு 12 ஆயிரம் ரூபாவும் அபராதமாக வித்தித்துள்ளார்.

அத்துடன் விதி முறைகளை மீறி முறையற்ற முறையில் முந்திச்செல்ல முற்பட்ட இரண்டு பேருக்கு தலா 3000 ரூபாவும், மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியவருக்கு 6 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாரியளவில் விபத்துக்கள் பதிவாகி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதால் சாரதிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.