இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மன்னார் மாண­வியின் உயர்­தரப் பரீட்சை முடிவை வெளி­யிட நீதி­மன்றம் உத்­த­ரவு!!

268

மன்­னா­ரி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மாண­வியின் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்சை பெறு­பே­று­களை உட­ன­டி­யாக வெளி­யி­டு­மாறு பிர­தம நீதி­ய­ரசர் பிரசாத் டெப் உத்­த­ர­விட்­டுள்ளார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தி­ருந்த மனு நேற்று திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே பிர­தம நீதி­ய­ரசர் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்பர் இம்­மனு மீதான வாதத்­தின்­போது குறிப்­பி­டு­கையில், இம்­மா­ணவி மன்னார் மாவட்­டத்தில் பிறந்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த நிலையில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் தரம் ஐந்து வரை கல்வி கற்­றுள்­ள­துடன் பின்னர் கொழும்பு மாவட்­டத்தில் கல்­வியைத் தொடர்ந்து அங்­கேயே க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையை எழு­தி­யி­ருக்­கிறார்.

பின்னர் இம்­மா­ண­வியின் பெற்றோர் மன்­னாரில் மீளக்­கு­டி­யே­றி­ய­தனால் இவர் மன்­னாரில் க.பொ.த. உயர்­தரப் படிப்பை மேற்­கொள்ள முயற்­சித்த போதிலும் அங்கு வச­தி­யீனம் கார­ண­மாக அனு­ரா­த­புரம் மாவட்­டத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்றில் சேர்ந்து கல்வி கற்­றுள்ளார்.

இதன் நிமித்­தமே இம்­மா­ணவி கடந்த 2016ஆம் ஆண்டு அநு­ரா­த­புரம் மாவட்­டத்­தி­லி­ருந்து க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருக்­கிறார்.

எனவே பிறி­தொரு மாவட்­டத்தில் பரீட்­சைக்கு தோன்­றினார் எனத் தெரி­வித்து, இவ­ரது பரீட்சைப் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது அநீதி என்­ப­துடன் இவ­ரது அடிப்­படை உரி­மையை மீறு­கின்ற செய­லு­மாகும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந்த விவா­தத்தை செவி­ம­டுத்த பிர­தம நீதி­ய­ரசர் பிரசாத் டெப், குறித்த மாண­வியின் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­களை உட­ன­டி­யாக வெளி­யிட்டு அவ­ரது பாட­சா­லைக்கு அனுப்பி வைக்­கு­மாறு பரீட்­சைகள் ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ர­விட்­ட­துடன் இம்­மா­ண­விக்கு எந்த மாவட்­டத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை வழங்க வேண்டும் என தீர்­மா­னித்துக் கொள்­ளு­மாறும் அறி­வித்தார்.

இவ்­வ­ழக்கின் மனு­தாரர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்­ப­ருடன் சட்­டத்­த­ரணி எம்.எம்.நவாஸ் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.  பிர­தி­வா­திகள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பி.சுரேகா ஆஜராகியிருந்தார்.