விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் வாழ்ந்த காலம் தற்போது இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன்!!

292

எங்களுடைய நாட்டில் எங்களுடைய பிரதேசத்தில் பெண்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் பெண்கள் தனியாக ஒரு இடத்திற்குச் சென்று வர முடியாத சூழ் நிலைதான் இன்றைய நாட்களில் இருக்கின்றது. பெண்களுக்குரிய கௌரவம் இல்லை. அவர்களுக்கு தனிமனித சுதந்திரம் இல்லை தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் அனுபவிக்க முடியாமல் இருக்கின்றது.

இந்த நிலை மாற்றப்படவேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் ஆட்சி செய்தபோது ஒரு தன்னம்பிக்கையுடன், பெண்கள் ஒரு கௌரவமாக எந்தநேரத்திலும் போர்ச்சூழல் இருந்தாலும் ஒரு மன நிம்மதியாக வாழ்ந்த காலம் இருந்தது. இவ்வாறு இன்று (14.03) வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று எங்களுடைய பெண்களுக்கு இருந்த கௌரவம் தன்னம்பிக்கை, பெண் சுதந்திரம் இன்று இல்லை. 2009ம் ஆண்டிற்குப் பிற்பாடு எங்களுடைய காலச்சாரத்தை எடுத்துப் பாருங்கள், அந்தக்காலத்தில் ஏதாவது ஒது பத்திரிக்கையில் எங்களுடைய பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் வருவது மிகவும் அரிதானது.

ஆனால் தற்போது அது வாரத்திற்கு ஒரு முறை பத்திரிகையில் வருகின்ற ஒரு செய்தியாக நாங்கள் பார்க்கின்றோம். எங்களுடைய சமுதாயம் எந்த அளவிற்கு கலாச்சார ரீதியில் பின்னோக்கிப் போகின்றது என்பதை அந்தச் செய்திகள் மூலம் நாங்கள் அறிந்து கொள்ளமுடியும். கணவன்மாரை இழந்த அந்தப் பெண்கள் தங்களுடைய பிள்ளைகளையும் கொண்டு அவர்கள் எப்படி கௌரவமாக பெண் சுதந்திரத்துடன் வாழ முடியும்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் ஒரு சுயமாக தங்களுடைய சுயமுயற்சியில் தங்களுடைய குடும்பத்தை நடாத்தக்கூடிய அளவிற்கு அவர்களுக்குரிய வாழ்வாதார பொருளாதார உதவிகளை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.