32 வருடங்களின் பின்னர் இலங்கையிலுள்ள பெற்றோரை தேடும் வெளிநாட்டு பெண்!!

247

32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி பெண்ணொருவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு தம்பதிகளால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பெண்ணொருவரே, தனது பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து வருகை தந்துள்ளார்.

ஷ்யாமலி என பெயர் கொண்ட ஆறு மாத குழந்தை, சுவீடன் தம்பதிகளுக்கு தத்துப் பிள்ளையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு தம்பதிகள் குழந்தையை சுவீடனுக்கு கொண்டு சென்று வளர்த்துள்ளனர். அவர் கடந்த 32 வருடங்களாக சுவீடனில் வளர்ந்துள்ளார்.

எனினும் தத்துப் பிள்ளைக்கு அறிந்து கொள்ளும் வயது வந்தவுடன், அவரின் சொந்த பெற்றோர் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தற்போது சுவீடனில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணத்திற்காக இலங்கை வந்துள்ளார். எனினும் அவர் தனது பெற்றோரை தேடியே இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தாயாரின் பெயர் காமர தேவாஆராச்சி ஸ்ரீயானி விஜேசிங்க, தந்தையின் பெயர் நிமல் கருணாதிலக்க மற்றும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஷாந்த குமார மற்றும் அசங்க ராஜ்ய என்பது அவர்களின் பெயராகும்.

இவர்களின் சொந்த இடம் பேராதனையாகும். 1985ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி குருணாகல் வைத்தியசாலையில் அவர் பிறந்துள்ள நிலையில் ஷ்யாமலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் இந்த நாட்டிற்கு வருகை தந்து ஒரு மாதமாக தனது பெற்றோரை தேடிய போதும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பேராதனைக்கு சென்று தனது பெற்றோரை தேடியுள்ளார். அவர்கள் வேறு இடத்திற்கு குடியேறி சென்றுள்ள நிலையில் அனுராதபுரத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அவர் கடந்த ஒரு மாதமாக இலங்கைக்கு வருகை தந்து மத்துகம பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்த இளம் பெண் ஹோட்டலுக்கு வந்து தனது பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு தன்னிடம் உதவி கோரியதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு பெற்றோரை பார்ப்பதற்கு ஆசையாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் தந்தை உயிரிழந்திருக்கலாம் என தான் நம்புவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். எனினும் தாயார் உயிருடன் இருப்பார் என நம்பவதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.