சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!!

212

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்தார்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மீட்கப்பட்ட கப்பலும் அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.