தாய்க்கு எயிட்ஸ் நோய் தொற்று : பாடசாலை மாணவிக்கு நடந்த விபரீதம்!!

226

எய்ட்ஸ் தொற்று தொடர்பில் சிறுவன் ஒருவர், பாடசாலை வாய்ப்பை இழந்திருந்த சம்பவம் ஒன்று இதற்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் கனேமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாய் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியமையால், மாணவி ஒருவர் பாடசாலை வாய்ப்பை இழக்க காரணமாகியுள்ளது. கனேமுல்ல குடாபொல்லத்த கல்லூரியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த மாணவியை பாடசாலைக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் அறிவித்துள்ளனர்.

தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஆராய்வதற்காக அந்த மாணவியின் தாயார் ஊடகவியலாளர் குழுவொன்றை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலைக்கு சென்ற அவரால் அதிபரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ள இயலவில்லை. ஊடகவியலாளர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆசிரியர்கள், அதிபர் பாடசாலையில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாணவி மற்றும் அவரது தாயார் Positive woman network என்ற நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுடன் பாடசாலைக்கு சென்ற போதிலும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.