வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் பதற்றம்!!

406

 
வவுனியா இறம்பைகுளம் மயானத்தில் இறந்தவரின் உடலை புதைப்பதில் இரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட முரன்பாடு நீண்ட நேரத்தின் பின்னர் அருட்தந்தையின் தலையீட்டையடுத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டது
. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் இன்று காலை இறந்த ஒருவரைப் புதைப்பதற்கு குழி தோண்டப்பட்போது கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சிலர் அவ்விடத்திற்குச் சென்று அனுமதி பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

குழி தோண்டியவர்கள் யாரிடம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தோலிக்க அருட்தந்தை அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் அவருடன் சென்ற சிலர் தோண்டிய குழியை மூவிட்டு வேறு இடத்தில் தோண்டுமாறும், தற்போது நீங்கள் தோண்டும் குழி பாதை ஓரமாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற இளைஞர்கள் குழி தோண்டி முடிக்கப்பட்டுவிட்டது. எனவே புதிதாக தோண்ட முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணம் தருகின்றோம் மூடிவிடுங்கள் என தெரிவித்துள்ளதையடுத்து முரண்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து அருட்தந்தை இரு பகுதியையும் சமாதானப்படுத்தியதுடன், நாளை இவ்விடத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டோம் என கடிதம் ஒன்றை தருமாறும் கோரி பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதையடுத்து குழி தோண்டடிய இடத்தில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானமானது கத்தோலிக்க, மற்றும் அங்கிலிக்கன் மதங்களை உள்ளடக்கியவர்களை புதைக்கும் மயானமாகும். அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களது உறவினர்களை அடக்கம் செய்து வருகின்றார்கள். மேலும் மற்றும் மாற்று சபையாருக்கெனவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் சில இடங்களில் மாறியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இன்று அப்பகுதியில் குழி தோண்டிய மாற்று சபையாருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையே சிறு முரண்பாடு ஏறப்பட்டு அருட்தந்தையின் தலையீட்டால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.