வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி திறந்துவைப்பு!!

285

 
வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தொகுதி இன்று (21.03.2017) பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் இதுவரையில் எட்டு பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் கனடா கிளையின் நிதியுதவியுடன் இந்த குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த இயந்திரத்தொகுதியிலிருந்து நாளொன்றிட்கு இரண்டாயிரம் லீற்றர் வடிகட்டிய குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சி.வில்வராசா, ஏ.ஜே.எஸ் நிர்மாணிகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அகிலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.