
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசார பெரேரா ஐபில் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
கடந்த ஐபில் போட்டியில் திசார பெரேரா, இந்தியாவின் ஹனுமா விகாரி, கரண் சர்மா, ஆஷிஸ் ரெட்டி ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம், பெரேரா குறித்து வெளியான தகவல் குறித்து இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எங்கள் வீரர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்திருக்கிறது.
எனினும் இது குறித்து விசேட விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு திசார பெரேரா சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என அறிவித்துள்ளது.





