ஹரியானாவை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது அதீத ஞாபக சக்தியால் கூகிள் போய் என்ற பெயரில் கலக்கி வருகிறான்.
ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் கவுடில்யா(5). இந்த சிறுவனின் ஞாபக சக்தியை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
5 வயது சிறுவனுக்கு இருக்கும் அப்பாவித்தனத்துடன் காணப்படும் இச்சிறுவனுக்கு உலகின் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்கள், மொழிகள், நிலப்பரப்பு, நதிகள், மலைகள், கடல்கள், கிரகங்கள், மக்கள் தொகை என அனைத்து தகவல்களும் தெரிந்திருக்கிறது.
இவ்வளவு தகவல்களையும் தெரிந்துவைத்துக்கொள்ள என்ன காரணமென்று கேட்டால் யாராவது என்னை கேள்வி கேட்கும்போது என்னால் பதில் சொல்ல முடியாமல் போனால் அது அசிங்கமாக இருக்கும் அதனால் தான் அனைத்தையும் தெரிந்துவைத்துள்ளேன் எனக் கூறுகிறார்.
கேட்கிற கேள்விக்கெல்லாம் சரியாக பதிலளிக்கும் இச்சிறுவன் படிப்பது முதலாம் வகுப்பில் என்பது குறிப்பிடத்தக்கது.





