மட்டு. திருமலை வீதியில் விபத்து – பள்ளிச் சிறுமி காயம்..!

1120

ACCIDENT_logoமட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று கலை 7மணியளவில் தம்புள்ளையிலிருந்து மரக்கறி ஏற்றிவந்த வான் ஒன்று மட்டக்களப்பு போக்குவரத்து சபைக்கு முன்பதாக வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியமையாலேயே குறித்த விபத்து ஏற்படுள்ளது.

காயமடைந்த சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாகனத்தை அப்புறப்படுத்தியதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரமணன்-