கென்யாவில் திக் திக் நிமிடங்கள் : விவரிக்கும் இந்திய பெண்!!

501


kenya

கென்யாவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தாங்கள் அனுபவித்த கொடுமைகளை தம்பதியினர் விவரித்துள்ளனர்.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் போஸ்ட்வாலா.



கென்யா தலைநகர் நைரோபியில் வசிக்கும் இவர் கடந்த சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வெஸ்ட்கேட் மாலில் இருந்துள்ளார். இவர் குழந்தைகளுக்கான சமையல் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது.

அப்போது இரண்டு ஆபிரிக்க வம்சாவளியினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஜாஸ்மினை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் சுட்டதில் பலர் குண்டடிபட்டு கீழே விழுந்தனர். அப்போது தான் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதே ஜாஸ்மினுக்கு புரிந்தது.



அப்போது ஜாஸ்மினின் கவலை எல்லாம் மாலின் மறு பக்கத்தில் தனது அத்தையுடன் இருக்கும் தனது 3 வயது மகன் கயான் பற்றி தான். ஜாஸ்மினின் மகள் அவரது கணவர் ஜெர்ஜெக்ஸுடன் இருந்தாள். ஒரு தீவிரவாதி அங்கிருந்த முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியே போகுமாறு கூறினான்.



அப்போது ஜாஸ்மின் அவர்களை அணுகி தன்னையும் தன் குழந்தைகளையும் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.
அப்போது அவரை பேசாமல் இருக்குமாறு கணவர் தெரிவித்தார் தான் நிச்சயம் சாகத் தான் போகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜாஸ்மின்.


உடனே தனது கணவரைப் பார்த்து நான் இறந்தால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் அதற்கு ஜெர்ஜெக்ஸோ நான் இறந்தால் நீ பார்த்துக் கொள் என்றார். ஆனால் ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தார் நல்லவேளையாக உயிர் பிழைத்துள்ளனர்.