வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மெசேஜை அன்சென்ட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!!

352


வட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்கள் என்றால் ஐந்து நிமிடத்திற்குள் அது தவறான மெசேஜ் என்று கண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பிய தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.



உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வட்ஸ்அப், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன்சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.

அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வட்ஸ் அப். தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.



இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன்சென்ட் மற்றும் எடிட் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும் மெசேஜ் அனுப்பும் போது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.


தற்போது சோதனையில் உள்ள இந்த பதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்ட்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வேர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்.