காதல் திருமணம் செய்த ஜோடியை நிர்வாணமாக்கி தாக்கிய கிராம மக்கள் : வீடியோ எடுத்த கொடூரம்!!

605

இந்தியாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை கிராமத்து மக்கள் நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷம்புபூரா என்னும் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட காதலர்கள் குஜராத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் அங்கு இருப்பதை கண்டுபிடித்த ஊர்மக்கள் தங்கள் கிராமத்துக்கு அவர்களை அழைத்து வந்தனர். பின்னர் கணவன்- மனைவி இருவரையும் நிர்வாணப்படுத்திய ஊர்மக்கள் அவர்கள் சராமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

இதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் அதை விட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட திருமணம் செய்து கொண்ட ஜோடியின் தந்தை உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.