சென்னையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது..!

930

arrest1அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்களை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்குப் பின் முரண்பாடாக பேசியதால் அவர்களை கைது செய்தனர் போலீசார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,