வவுனியாவில் மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்து : ஒருவர் காயம்!!

862

 
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (21.04.2017) மதியம் 2 மணியளவில் இலங்கை மின்சார சபையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சாரசபையின் வாகனம் சூசைப்பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதிக்கு திரும்ப முற்பட்டபோது மோட்டார் சைக்கிலில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் சிறு காயங்களுக்குள்ளானார்.