டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!!

283

இலங்கை ரூபாய்யின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்வதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்காக காணப்பட்ட 152.15/25 என்ற ரூபாய் பெறுமதி புதன்கிழமை வரையில் 153.40/50 வரை வீச்சியடைந்துள்ளது.

சிறிய வங்கிகளிடம் இறக்குமதி தேவை உள்ள போதிலும், சந்தை வழங்கல் போதுமானதாக இல்லை என நிதி தரகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயர் வர்த்தக நிதி உண்டியல்களை கொண்ட இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகமாக உள்ளதென தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.