சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்டி குழாமில் கிளி­நொச்சி மாணவி!!

352

judo

இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள உலக சமா­தா­னத்­திற்கும் ஐக்­கி­யத்­திற்­கு­மான 8ஆவது சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டியில் ­இ­லங்­கையைச் சேர்ந்த 28 ஜூடோ வீர, வீராங்­க­னைகள் பங்­கு­ பற்­ற­வுள்­ளனர்.

இதனை முன்­னிட்டு கம்­ப­ளையில் நடத்­தப்­பட்ட 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான திறன்காண் போட்­டி­க­ளின்­ மூலம் 56 ஜூடோ வீர, வீராங்­க­னைகள் முன்னோடி குழா­முக்கு தெரிவு செயப்­பட்­டுள்­ள­தாக இலங்கை ஜூடோ சங்­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

முன்­னோடி குழா­முக்கு தெரி­வா­கி­யுள்­ள­வர்­களில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லி­ருந்து கிளி­நொச்சி ஆச்­சி­ரம சைவ சிறுவர் இல்­லத்தைச் சேர்ந்­த­வரும் இந்து கல்­லூ­ரியில் கற்­ப­வ­ரு­மான ரசீந்­திரன் சுஜீ­பாவும் அடங்கு கின்றார். இவர் 16 வய­துக்­கு­பட்­ட­வர்­க­ளுக்­கான 40-44 கிலோ பிரி­வி­லேயே தெரி­வா­கி­யுள்ளார்.

இந்தக் குழாமில் இடம்­பெறும் 56 வீர, வீராங்­க­னை­களில் இறுதி 28 வீரஇ வீராங்­க­னைகள் தெரிவு செயப்­பட்டு லக்­னோவில் அடுத்த மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள போட்­டி­களில் கலந்­து­கொள்ள அனுப்­பி­ வைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இதற்­கான இறுதித் தேர்வுப் போட்­டிகள் அடுத்­த மாதம் இரண்டு கட்­டங்­களில் நடை­பெ­ற­வுள்­ளன. கிளி­நொச்சி மகா­தேவா ஆ­சி­ரம சைவ சிறுவர் இல்ல ஜூடோ வீராங்­க­னை­க­ளுக்கு பி. டபிள்யூ. ஜய­வர்­தன பயிற்சி அளித்து வரு­கின்றார்.

இந்த வீராங்­க­னைகள் இவ் வரு­டமே ஜூடோ விளை­யாட்டில் ஈடு­பட ஆரம்­பித்­த­தா­கவும் அவர்­க­ளுக்கு தீவிர பயிற்­சி­களைத் தொடர்ந்து வழங்­கினால் அவர்­களால் பதக்­கங்கள் வெல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இவ் வருடம் நடை­பெற்ற அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா­வுக்­கான ஜூடோ போட்­டி­க­ளிலும் தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான ஜூடோ போட்­டி­க­ளிலும் சுஜீ­பாவின் மூத்த சகோ­தரி ரசீந்­திரன் தமிழ்­மகள் பதக்­கங்கள் வென்­ற­தையும் அவர் நினை­வு­கூ­றத்­ த­வ­ற­வில்லை.

வட மாகாணம் சார்­பாக ஜூடோவில் முத­லா­வது பதக்­கதை வென்று கொடுத்­தவர் தமிழ்மகள் ஆவார். வருங்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை மகாதேவா ஆசிரம சைவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மூலம் வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பயிற்சிகளை அளிக்கவுள்ளதாக பயிற்றுநர் ஜயவர்தன கூறினார்.