இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நாய் மீண்டும் அமெரிக்காவில்!!

479

இலங்கை பாதுகாப்பு படையில் ஆறு வருடங்களாக பணியாற்றிய நாயொன்று மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளது.

இலங்கை பொறியியல் படையணியில் நிலக்கண்ணி வெடிகள் அடையாளம் காணும் குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஷீரா – யென்கி என்ற பெயருடைய ஜேர்மன் ஷெபர்ட் வகை நாய் தனது கடமையை நிறைவு செய்துள்ளது.

குறித்த காலப் பகுதியினுள் இந்த நாய் வடக்கு பிரதேசத்தில அதிக அளவிலான நிலக்கண்ணி வெடிகளை அடையாளம் காண உதவி செய்துள்ளது. 62,680 மீற்றர் நீளத்தினை கண்கானிப்பதற்கு இந்த நாய் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷீரா – யென்கி மற்றும் அந்த படையணியின் அதிகாரி இணைந்து மந்துவில், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இதன்போது பல்வேறு வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் இந்த நாயினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி பிறந்த இந்த நாய் 2011ஆம் ஜுன் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பயிற்சியின் பின்னர் இராணுவ வெடிகுண்டு கண்கானிப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மிகப்பெரிய சேவையை செய்த இந்த நாய் கடந்த வியாழக்கிழமை மீண்டும் அமெரிக்கா நோக்கி அமெரிக்கா பிரதிநிதியுடன் புறப்பட்டு சென்றுள்ளது.