கம்போடியாவில் போலி கடனட்டை மூலம் 50 ஆயிரம் டொலர் மோசடி செய்த இலங்கையர் உட்பட 2 பேர் கைது!!

409

credit-card-debt

கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு போலி கடனட்டைகள் மூலம் 50ஆயிரம் டொலருக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவைச் சேர்ந்த டெல்வின் ஜோசப் (30), இலங்கையைச் சேர்ந்த அருணாசலம் வினோராஜ் (34) ஆகியோரே இணைந்து கூட்டு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் மலேசியாவைச் சேர்ந்த டெல்வின் என்பவரே இம் மோசடிக்கு முக்கிய புள்ளி என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கைது செய்யப்பட்ட இலங்கையரான வினோராஜ் தெரிவிக்கையில்..

டெல்வின் ஜோசப், கைது செய்யப்படுவதற்கு ஒருமாதத்திற்கு முன்னர் தான் எனக்கு அறிமுகமானார். அவர், கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் இதுவரையில் எனக்கு 36 போலியான கடனட்டைகளைத் தந்துள்ளார். அவற்றை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவம் அவற்றை டெல்வினிடமே கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணத்திலிருந்து தனக்கு 10 வீதம் மட்டுமெ அவர் கொடுப்பதாகவும் மீதியை அவர் வைத்திருப்பதாகவும் வினோராஜ் குறிப்பிட்டார்.

பொலிஸார் 40 ஆயிரம் டொலர் அல்லது 50 ஆயிரம் டொலர் மோசடி செய்துள்ளதாக தன்னைக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அது உண்மையில்லை என கம்பொடியாவின் ஃப்னோம் பென் மாநகர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையை ஒக்டோபர் 11ம் திகதிக்கு ஃப்னோம் பென் மாநகர நீதிமன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.