கம்பளை குழந்தை கடத்தலின் பின்னணியில் பலர் : கைதான உறவினர், இரு பெண்கள் விளக்கமறியலில்!!

301

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கங்க வட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்­பி­லி­ருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.


குழந்­தை­யுடன் மாய­மான பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனக் கண்­ட­றி­யப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்­தையை தடுப்பில் வைத்­தி­ருந்த இரு பெண்­க­ளை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை மேல­திக நீதிவான் உத்­தர­விட்­டுள்ளார்.

இந்தக் கடத்­தலை, குழந்­தையை இறு­தி­யாக அழைத்துச் சென்ற மாமா முறை இளை­ஞரே நடத்­தி­யுள்­ள­தாக கூறும் பொலிஸார், பிறி­தொரு குழுவும் இத­னுடன் தொடர்­புபட்டுள்­ளதைக் கண்­ட­றிந்­துள்­ள­துடன் அவர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.


பொலிஸ் மா அதி­பரின் விசேட உத்­த­ர­வுக்­க­மைய மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க, கண்டி – மாத்­தளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க ஆகி­யோரின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள தனிப் பிரி­வுகள் இரண்டின் கீழ் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களை வழி நடத்தும் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் எம்.என்.எஸ். மெண்­டி­ஸிடம் வழங்­கப்பட்­டுள்­ள­துடன், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஞான­சே­னவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய இவ்­விரு குழுக்­களும் மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

அதன்­படி ஒரு குழு கம்­பளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரிசாந்தவின் கீழும், மற்றைய குழு கம்பளை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழும் அமைக்கப்பட்டுள்ளன.
.