வவுனியாவில் நேற்று (07.05) மதியம் 12 மணியளவில் பொலிசார் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா தோணிக்கல், ஆலடி பகுதியிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் மதியம் குளவி தாக்கிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றிற்கு கலைந்த குளவி கடமையிலிருந்த பி.என்.நிமால் 40 வயதுடைய பொலிசார் மீது கொட்டியுள்ளது.
இதையடுத்து அவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






