மோடி பய­ணிக்கும் பாதை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை!!

689

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு இன்று விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் கொழும்பு நகரில் இன்று மாலையும் நாளை முற்­ப­கலும் வேளை­யிலும் பல வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன. இந்­திய பிர­தமர் பய­ணிக்கும் பாதை வழியே அவர் பய­ணிக்கும் சமயம் வேறு எந்த நபரும் பய­ணிக்க அனு­ம­தி­ய­ளிக்­காத நிலையில் கொழும்பின் பல வீதிகள் இதன்­போது மூடப்­ப­ட­வுள்­ளன.

குறிப்­பாக கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் ஒரு பக்க ஒழுங்கை, பேலி­ய­கொடை முதல் பேஸ் லைன் வீதி ஊடாக பய­ணித்து தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை­யி­லான வீதிகள் மற்றும் அப்­பி­ர­தான வீதி­க­ளுடன் இணையும் அனைத்து ஒழுங்­கை­களும் ஒவ்­வொரு கால நேரத்தில் முற்­றாக பொது போக்­கு­வ­ரத்து தொடர்பில் மூடப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்பில் விசேட போக்­கு­வ­ரத்து திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­வுள்­ளது. இன்று மாலை 6 மணி முதல் குறிப்­பிட்ட நேரங்­களில் குறிப்­பிட்ட பகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த விசேட போக்­கு­வ­ரத்தும் பாதை மூடும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெறும் என பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அதன்­படி இந்­தியப் பிர­தமர் பய­ணிக்கும் பிர­தான வீதி­களும் அத­னுடன் இணையும் ஏனைய உள் வீதி­களும் இந்­திய பிர­தமர் மோடி பய­ணித்து முடியும் வரை முழு­மை­யாக மூடப்­படும் என்று அவர் சுட்­டிக்­காட்­டினார். இன்று மாலை 6.00 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் மோடி, அங்­கி­ருந்து அதி­வேக பாதை ஊடாக கொழும்பு நக­ருக்குள் பிர­வே­சிக்க உள்ளார். அதன்­படி மூடப்­ப­ட­வுள்ள வீதி­களின் விப­ரங்கள் வரு­மாறு,

இன்­றைய தினம் மூடப்­படும் வீதிகள் பி.ப. 6.15 மணிக்கு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி, பேலி­ய­கொட, பொரளை பேஸ்லைன் வீதி, டி.எஸ் கல்­லூரி போக்­கு­வ­ரத்து ஒளி சமிக்ஞை சந்தி, கிரீன் பார்க், தாமரைத் தடாகம், பொது­நூ­லக சுற்­று­வட்டம், ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்தை, மல் வீதி, பித்­தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்­கா­ராம எல்லை வரை பொதுப் போக்குவரத்து தொடர்பில் தடைச் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

பி.ப. 07.15 மணிக்கு – கங்­கா­ராம எல்­லை­யி­லி­ருந்து நவம் மாவத்தை, உத்­த­ரா­னந்த மாவத்தை, முகம்­மது மாக்கான் மார்க்கார் மாவத்தை, காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையில் போக்குவரத்து தடைச் செய்­யப்ப்­ட­வுள்­ளது.

பி.ப. 08.20 மணிக்கு – தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் இருந்து காலி முகத்­திடல் வீதி, ரவுண்­டா­னாவில், என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், ஜனா­தி­பதி மாளிகை வரை­யிலும் பி.ப. 10.30 மணிக்கு – ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், காலி முகத்­திடல் வீதி ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை­யிலும் வீதிகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்­ளன.

நாளைய தினம் மு.ப. 09.05 மணிக்கு – தாஜ் சமுத்ர ஹோட்டல், காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், கொள்­ளுப்­பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்­தளை சந்தி, செஞ்­சி­லுவை சந்தி, பொது நூலக சுற்­று­வட்டம், க்ளாஸ்­ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டார்ஸ், சுதந்­தி­ர­ச­துக்க சுற்­று­வட்டம், சுதந்­திர மாவத்தை, பௌத்­தா­லோக மாவத்தை, மெட்லாந்ட் பிளேஸ் சந்தி, பௌத்­தா­லோக மாவத்தை ஊடாக பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­டபம் வரை வீதி மூடப்­ப­ட­வுள்­ளது.

மு.ப. 10.50 மணிக்கு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, ஜாவத்தை சந்தியால் இடதுபக்கம் திரும்பி, ஜாவத்தை வீதி, கெப்பட்டிபொல சந்தியால் வலது பக்கம் திரும்பி கெப்பட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் மைதானம் வரை வீதி மூடப்படவுள்ளது.