மோடியின் பாதுகாப்புக்காக இலங்கை வந்த கறுப்புப் பூனைகள்!!

402

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் இரண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக 600 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளார். இந்திய பிரதமர் இலங்கையில் 23 மணித்தியாலங்கள் மாத்திரமே தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், இந்திய பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது காணாமல் போனோர், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது , தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பிலான விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.