கழிப்பறைகளை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!!

289

இந்­தி­யாவின் சத்­தீஸ்கர் மாநி­லத்தில் பெண்­ணொ­ருவர் தனது வீட்டில் கட்­டப்­பட்ட கழிப்­ப­றை­களை காண­வில்லை அவற்றை கண்­டு­பி­டித்து தர வேண்டும் என பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

சத்­தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்­டத்தில் அமர்பூர் என்ற கிராமம் உள்­ளது. இந்த கிரா­மத்தை சேர்ந்த 70 வயது வயோ­திப பெண் பெலா பாய் பாட்டீல். இவ­ரது மகள் சந்தா (40). இரு­வரும் வறு­மையில் வாழ்க்­கையை நடத்­து­ப­வர்கள்.

‘சுவச் பாரத் அபியான்’ திட்­டத்தின் கீழ் தங்கள் வீட்டில் கழிப்­பறை கட்­டித்­தர கோரி, 2015 –-16ஆம் ஆண்டில் பஞ்­சா­யத்து அலு­வ­ல­கத்தில் விண்­ணப்பம் செய்­தனர்.

ஆனால், இது­வரை கழிப்­ப­றைகள் கட்­டப்­ப­ட­வில்லை. இது குறித்து பஞ்­சா­யத்தில் கேட்ட போது, ‘கழிப்­ப­றைகள் கட்­டப்­பட்டு விட்­டன. அதற்­கான செலவு தொகையும் அளிக்­கப்­பட்டு விட்­டது’ என தெரி­வித்­துள்­ளனர்.

தகவல் அறியும் சட்­டத்தின் கீழ் தகவல் கேட்ட போது, கழிப்­ப­றைகள் கட்­டப்­பட்டு விட்­ட­தாக ஆவ­ணங்கள் மூலம் தெரிய வந்­துள்­ளது. இதை­ய­டுத்து இரண்டு பெண்­களும் கழிப்­ப­றை­களை காண­வில்லை என்றும் கண்­டு­பி­டித்து தர வேண்டும் என்றும் பிலாஸ்பூர் மாவட்ட பொலிஸில் முறைப்பாடு செய்து ள்ளனர்.