வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.05.2017) 82வது நாளாகவும் தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு யாழ்ப்பாணத்திருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதரவினை வழங்கியதுடன் நாங்கள் சாகும்வரை எமது பிள்ளைகளை தேடிக்கொண்டு தான் இருப்போம் என்று தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த 1996ம் ஆண்டு முதல் எங்களுடைய பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர். 1997ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அன்றிலிருந்து இன்று வரையும் எமது பிள்ளைகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.
எங்களினால் எவ்வளவோ போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிற்கும் தீர்வு கிடைக்கவில்லை. இன்று வவுனியாவில் 82 நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வருபவர்களுக்கு அதரவு வழங்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.










