2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெல்லும் : சச்சின் நம்பிக்கை!!

303

sachin

2015ம் ஆண்டுல் நடக்கவுள்ள உலக கிண்ணத் தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

வரும் 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலக கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன.
மொத்தம் 44 நாட்கள் நடக்கும் இத்தொடரில் அரையிறுதி, இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 49 போட்டிகள் 14 மைதானங்களில் நடக்க உள்ளது.

இதில் இந்திய அணி, பி பிரிவில் பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, சிம்பாவே, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவாகும் ஒரு அணியுடன் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2011ல் நடந்த உலக கிண்ண தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதேபோன்று 2015ல் நடக்கும் போட்டியிலும் இந்திய அணி பட்டத்தை வெல்லும் என நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் 2015ல் இந்திய அணி கிண்ணத்தை வெல்லும். இது எனது விருப்பம் மட்டுமல்ல கோடான கோடி ரசிகர்களின் விருப்பம். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

எனவே அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை, தட்ப வெப்ப நிலைக்கேற்ப விளையாடுவார்கள். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்ய இருப்பது, உலக கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும்.

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் ஆசிய அணிகளுக்கு பட்டத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.