
ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா தானமாக கொடுத்த சிமித்ரா என்கிற சுமி என்ற யானை தெருத் தெருவாக பிச்சை எடுப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இந்த யானைய தானமாக கொடுத்தார் ஜெயலலிதா. இந்நிலையில் யானைக்கு திடீரென காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அதை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் யானை பெங்களூருக்குப் போகவில்லை. மாறாக சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர் சிலர். அங்கு அதைத் தெருத் தெருவாக பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.
பொலிசார் யானையைப் பறிமுதல் செய்த பாகன் மீது வழக்கும் போட்டுள்ளனர். விஜயகாந்த்தின் முன்னாள் தொகுதியில் தற்போது இந்த யானை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முகாமிட்டுள்ளதாம்.
அங்கு கடைவீதிகளிலும், தெருத் தெருவாகவும் இதை வைத்து பிச்சை எடுக்கிறார்களாம். ஜெயலலிதா தானமாக கொடுத்த யானையை இப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முன்னாள் தொகுதியில் பிச்சை எடுக்க வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





