தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழப்பு : எட்டுப்பேரைக் காணவில்லை!!

607

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தக் கல்வி தொடர்பான தென்மாகாண பிரதிப் பணிப்பாளர் பிரசஞ்சலி கமகே இந்தப் புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்த எட்டு மாணவர்களில் ஆறு பேர் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய இரண்டு பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோன்று காணாமல் போயுள்ள எட்டு மாணவர்களும் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களேயாகும். தெனியாய கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

அங்குள்ள கொடபொல கனிஷ்ட பாடசாலை மண்சரிவுக்குள் அகப்பட்டபோது குறித்த மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் பிரசஞ்சலி கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.