கனடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்!!

346

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அமலன் தண்டபாணிதேசிகரின் வழக்கு விசாரணை நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயராசன் மாணிக்கராசாவின் மகளிடம், தண்டபாணிதேசிகர் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜெயராசன் மாணிக்கராசாவின் குடும்பத்தினர் முன்னிலையில், தண்டபாணிதேசிகர் கருத்து வெளியிட்டார்.

“உங்கள் தந்தையை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை, நீங்கள் என்னை அறிவீர்கள். நான் செய்த காரியத்திற்காக வருந்துகின்றேன். என்னை மன்னித்து விடுங்கள்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனேடிய உச்சநீதிமன்றத்தில் தனது தீர்ப்பின் அறிக்கையை வெளியிட்டபோது, அமலன் தாண்டபாணிதேசிகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மாணிக்கராசாவின் மனைவியும் அவருடைய மகனும், மகளின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது வழக்கறிஞரான எலிஸ் பின்ஸோனல்ட் அதை எதிர்த்து வாதாடிய போதிலும் தண்டபாணிதேசிகர், உணர்ச்சிபூர்வமாக நடந்து கொண்டுள்ளார்.

தண்டபாணிதேசிகர், மீதான குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் குறைந்தபட்சம் 17 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனேடிய அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வழக்கு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜுன் மாதம் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி 40 வயதான ஜெயராசன் மாணிக்கராசா கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் ஒரே நகரத்திலிருந்து மாணிக்கராசாவும், அமலனும் கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். மாணிக்கராசா 2000 ஆம் ஆண்டில் சென்றுள்ள நிலையில், அதற்கு அடுத்தாண்டில் அமலன் தண்டபாணிதேசிகர் கனடா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.