பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு விசேட அணுப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இலங்கை அணுசக்தி அதிகாரசபை இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இராணுவ, பொலிஸ் பாதுகாப்பிற்கு மேலதிகமாக அணுசக்தி பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.
அணுக்கதிர்வீச்சுக்கள் மூலம் உலகத் தலைவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்களை விளைவிக்க முடியும் என இலங்கை அணுசக்கதி அதிகாரசபையின் தலைவர் டொக்டர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல்களை தடுக்க ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகத் தலைவர்கள் பங்கெற்கும் ஹோட்டல்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அணுப்பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.