மோதலுடன் தொடர்புடைய 53 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!!

433

OLYMPUS DIGITAL CAMERA

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 53 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் நசில் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு மாணவிகளும் அடங்குவர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலில் 23 மாணவர்கள் காயமடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் இரண்டு மாணவர்கள் குழுக்கள் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.



மோதல் இடம்பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.