ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – மேஷம்!!

508

mesha

எதையும் சாதிக்கும் ஆற்றலுடைய நீங்கள் காரணமில்லாமல் எதற்கும் சினம் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும் மாதமாக அமையும். மாதத் தொடக்கத்தில் ராசியாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு வட்டம், உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும்.

மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் குருவினால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

பிள்ளைப் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோக மாற்றம் உண்டாகலாம்.

வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். புதிய சொத்துக்களை வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.

தாய், தந்தை, பெரியோரிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மையைத் தரும். பெண்களுக்கு மனக் குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்திலிருந்த பிரச்னைகள் தீரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியது வரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள் : 9, 10 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதீர்கள்.

பரிகாரம் : தினம்தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் சரவணரூபாயை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : செவ்வாய்தோறும் அறுகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.