ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

468

mithunam

வாக்குவாதத்தில் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன்வசப்படுத்தும் திறமையைப் பெற்றவர்கள். அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மாதத்தின் தொடக்கத்தில் ராசியாதிபதி புதனின் சஞ்சாரம் சுக சௌக்கியத்தை தரும்.

உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

தொழில் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும். வேலைப்பளு, வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். உங்களின் ஆலோசனையைக் கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள்.

இருப்பினும் வேலை விஷயத்தில் எதிலும் மிகவும் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை.

பெண்கள் இந்த மாத இறுதியில் சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 13, 14 திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம் : சிவன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ கோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை 14 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : துளசியை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். துளசியின் மகிமையால் எல்லாவித நன்மைகளும் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன், வியாழன்.