ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம்; வௌிவிவகாகர அமைச்சர் அழைப்பு!!

1031

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க, தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

அவரது இந்த விஜயத்தின் போது இந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாணயாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம் எனவு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வர இருந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

மேலும் தான் ஒரு நடிகன். எனது முடிவுகளை, பயணங்களை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாணயாக ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்டுள்ள ரவி கருணாணயாக, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார்.

இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது, ரஜினி ஆசைப்பட்டால் இலங்கை வரலாம் என்று அமைச்சர் ரவி கருணாணயாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.