ஐக்கிய தேசிய கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினா் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மாத்தறையில் நேற்று மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் குழப்பமடைந்தமைக்கு அரசாங்கம்தான் காரணம் என்று கூறிய அவா் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் மூலமாக ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பட்டுள்ளார் என சஜித் கூறியதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
சம்பவத்தின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் சிலருடன் கலந்துரையாடிய போது சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தி அவரை தலைமைப் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைவராக வருவதை ஜனாதிபதி மஹிந்த விரும்பவில்லை என்றும் தனது ஊரைச் சோ்ந்த எவரும் எதிர்காலத்தில் உந்த ஒரு கட்சிக்கும் தலைமை தாங்குவதை ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் மற்றுமொரு உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதனால் சஜித் பிரேமதாச தலைவராக வருவது கடினமானது எனவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வருடமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்ட போது அரசாங்கம் காப்பாற்றியிருந்தது.
குறிப்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது அலுவலகத்துக்கு முன்பாக உள்ள வீதியை பொலிஸார் திருத்தப் பணி என கூறி மூடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.





