கொழும்பில் தனக்கு நடைபெறவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்தார் விக்னேஸ்வரன்..!

522

mahindaவடமாகாண முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார்.

நாளை ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.

தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும் கூறி, அவர் இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதவியேற்ற பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தாம் உடனடியாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.