கலைஞன் என்ற முறையில் எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால் நாட்டை விட்டு வெளியேற தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது..
நாட்டின் அனைத்து திரைப்படத்துறையையும் பொலிவுட் என அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில் 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளிவருகின்றன. ஹொலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பது என் குறிக்கோள்.
கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து பின்வாங்கமாட்டேன். நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 விரைவில் வெளிவரவுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளது, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.