கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 19 வயதான யுவதி உயிரிழப்பு : கடத்திய இருவரும் வைத்தியசாலையில்!!

241

ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெ­ளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்­கிய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட யுவதி உயி­ரி­ழந்­து­ளள்­துடன் இந்தச் சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சப் இன்ஸ்­பெக்டர் நிரோஷன் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெளி, மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வ­மொன்றில் மட்­டக்­க­ளப்பு ஏரிக்­கரை வீதியைச் சேர்ந்த 19 வய­தான யுவதி தலையில் படு­கா­ய­மேற்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­ப­வம்­பற்றி பொலிஸார் மேலும் தெரி­விக்­கையில், வெள்­ளிக்­கி­ழமை இரவு திரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வரம் கோயி­லுக்குச் சென்­று­விட்டு காரில் திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் இரவு 10 மணி­ய­ளவில் தேநீர் அருந்­து­வ­தற்­காக சந்­தி­வெ­ளியில் கார் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்தக் காரில் மேற்­படி அசம்­பா­வி­தத்தில் பலி­யான யுவதி, அவரின் தாய், பெரி­யப்பா, கார்ச் சாரதி ஆகியோர் இருந்­துள்­ளனர்.

அந்­நேரம் அங்கு திடீ­ரென மோட்டார் சைக்­கிளில் வந்­தி­றங்­கிய இரண்டு இளை­ஞர்கள் யுவ­தியைப் பிடித்து மோட்டார் சைக்கிள் ஆச­னத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதி­வே­க­மாகப் பய­ணித்­துள்­ளனர்.

அவ்­வே­ளையில் யுவ­தியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவ­தியைக் கடத்திக் கொண்டு அதி­வே­க­மாகச் செல்லும் மோட்டார் சைக்­கிளை பின்­தொ­டர்ந்­துள்­ளனர்.இவ்­வே­ளையில் அதி­வே­க­மாகச் சென்று கொண்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி­யதால் விபத்துச் சம்­ப­வித்­துள்­ளது.

அச்­சம்­ப­வத்தில் கடத்­தப்­பட்ட யுவ­தியும், கடத்திச் சென்­ற­தாகக் கூறப்­படும் இரண்டு இளை­ஞர்­களும் பலத்த காய­ம­டைந்­துள்­ளனர்.

காய­ம­டைந்த மூவரும் உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள சந்­தி­வெளி பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவதி சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை மர­ண­மா­கி­யுள்ளார்.

யுவ­தியைக் கடத்திச் சென்­ற­தாகக் கூறப்­படும் காயங்­க­ளுக்­குள்­ளான இரு இளை­ஞர்­களும் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இதே­வேளை யுவ­தி­யையும் தாங்கள் இரு­வ­ரையும் காரில் வந்­த­வர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடு­மை­யாகத் தாக்­கி­ய­தா­கவும் இதன் கார­ண­மா­கவும் தாங்கள் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­ன­தாக மோட்டார் சைக்­களில் பய­ணித்த இளை­ஞர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அந்த வாக்­கு­மூ­லத்­தின்­படி காரில் வந்த யுவ­தியின் உறவினர் மற்றும் கார்ச் சார­தி­ன் ஆகியோர் கைது செய்­யப்­பட்டு ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் வினோபா இந்­திரன் முன்­னி­லையில் சனிக்­கி­ழமை ஆஜர் செய்­யப்­பட்­ட­போது, சந்­தேக நபர்­களை ஜுலை மாதம் 7ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதே­வேளை யுவ­தியின் உடற் கூற்றுப் பரி­சோ­தனை நேற்று குரு­ணாகல் பொது வைத்­தி­ய­சாலை சட்ட வைத்­திய அதி­காரி இலங்­க­ரத்­ன­வினால் குரு­ணாகலில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத­னி­டையே குறித்த யுவ­திக்கும் சம்­பந்­தப்­பட்ட ஒரு இளை­ஞ­னுக்கும் ஏற்­கெ­னவே பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் காணப்பட்ட காதல் தொடர்பு குறித்த மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்து வழக்கு தொட­ரப்­பட்டு சம­ர­ச­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்ட நிலையில் குறித்த யுவ­தியை உயர் கல்­விக்­காக அவ­ரது தாய் இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்ளார் என்­கின்ற விவ­ரமும் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்­துள்­ளது.

குறித்த யுவதி சமீ­ப­மான சில நாட்­க­ளுக்கு முன்னர் இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இந்த யுவதி இந்­தி­யா­வி­லி­ருக்கும் போதும் தொடர்ந்து தனது காத­ல­னுடன் தொடர்­பி­லி­ருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஈ.எல். பதூர்தீன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.