நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)

1286

 

நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ  கடந்த  25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி மகோற்சவத்தில் 

எதிர்வரும்
04.07.2017 செவ்வாய்கிழமை மஞ்ச உற்சவமும்
05.07.2017 புதன்கிழமை விஷேட கருட சர்ப பூஜையும்
07.07.2017 வெள்ளிக்கிழமை சப்பற உற்சவமும்
08.07.2017 சனிக்கிழமை இரதோற்சவமும்
09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும்
10.07.2017 தெப்போற்சவம் (பூங்காவனம்)
என்பன நடைபெறும்.

படங்கள் : நயினை குமரன் (Nainai m Kumaran)