இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி செய்தி!!

99

புதிய இணைப்பு

கடந்த இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்தமையினால் வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி குறித்து இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் உள்ள கையிருப்பை நிர்வகிப்பதற்காக இந்த நடவடிக்கை 3 மாதங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், வாகன இறக்குமதிக்கு எந்த தடையோ அல்லது கட்டுப்பாடோ இல்லை என்றும், இந்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளதென்றும்,

ஆனால் இந்த நேரத்தில் யாராவது ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின் இறக்குமதியை 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு :  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் 50% வரி இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.