20 கிலோகிராம் எடை கொண்ட உயிருள்ள சிங்கி இறால் ஒன்றை பயணி ஒருவர் தனது பயணப் பொதியில் வைத்து கொண்டு செல்ல முயன்றதை அமெரிக்க விமான நிலையமொன்றின் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பொஸ்டன் நகரிலுள்ள போகன் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிங்கி இறாலின் புகைப்படத்தையும் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பொஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் சோதனையின்போது பயணி ஒருவரின் பொதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய சிங்கி இறால் இது என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் பேச்சாளர் மைக்கல் மெக்கர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிங்கி இறால்களை விமானப் பயணிகள் தம்முடன்கொண்டு செல்வது தடை செய்யப்படவில்லை என்றார்.
உயிருள்ள சிங்கி இறால்கள் கொண்டு செல்லப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகின்ற போதிலும் தெளிவான, பொலித்தீன் பைகளில் கசியாத விதத்தில் அவை அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.