வட மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கூமாங்குளம் கிராமத்திற்கென பொதுநோக்கு மண்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நேற்று (05.07.2017) இடம்பெற்றது.
நோக்கு மண்டபமானது கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியில் அமையவுள்ளது. இவ் அடிக்கல் நாட்டு விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள், சித்தி விநாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலய தலைவர்கள், கமக்காரர் அமைப்பின் தலைவர், முதியோர் சங்க தலைவர், விளையாட்டுக்கழக தலைவர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.




















