வவுனியாவில் கடந்த காலங்களில் இருந்த இயக்கங்கள் என்ன செய்தன என எனக்குத் தெரியும் : ப.சத்தியலிங்கம்!!

541

வவுனியா கணேசபுரத்தில் மாகாண குறித்தொகுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், வைத்திய அதிகாரி விடுதி என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வேவ்வேறு காரணங்களுக்காக அரசியல் காரணங்களுக்காவோ அல்லது பதவி காரணங்களுக்காகவோ பல விடயங்களை உள்ளுக்குள் இருந்தே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த அடிப்படையிலே ஆரம்பத்திலிருந்து ஒரு அமைச்சருக்கு எதிராக ஒரு விசாரணை கொண்டுவரப்பட்டது . அந்த அமைச்சருக்கு எதிரான விசாரணையின் தொடக்கத்திலிலேயே ஏனைய மூன்று அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என எமது வடக்கு மாகாண முதலமைச்சர் ஒரு நிபந்தனையினை கொண்டு வந்தார்.

அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாத போதும் ஒரு விசாரணைக் குழுவினை அமைத்து அமைச்சர்களுக்கு எதிராக குறைகள் குற்றங்கள் இருப்பின் நீங்கள் எழுத்து மூலமாக தனக்கு அறிவிக்கலாம் என்று ஒரு பத்திரிக்கை விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்த ஒருமாதகால பத்திரினை விளம்பரத்திலேயே அந்த விசாரணை குழுவிற்கு எட்டு முறைப்பாடுகள் கிடைபெற்றுள்ளது. எனினும் எனக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் எதிராக எந்த முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை

மேலும் இரண்டு வாரங்கள் இந்த குற்றச்சாட்டுக்களை பெறுவதற்காக காலம் நீடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை பெறுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த இறுதிநாளில் ஒரு வடமாகாணசபை உறுப்பினர் எனக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அந்த குற்றச்சாட்டுக்களை வழங்கிய சமயத்தில் வடக்கு முதலமைச்சரினால் இரண்டு நீதியரசர்களையும் இரண்டு நீதிமன்ற நீதிபதிகளையும் ஒரு அரச அதிபரையும் கொண்டு உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு முன்பாக நாங்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்

அந்த விசாரணையில் இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதோ ஒருவகையில் நிரூபிக்கப்க்கப்பட்டமையினால் இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் நானும் டெனிஸ்வரனும் தொடர்ந்தும் வடமாகாணசபை அமைச்சர்களாக கடமைபுரிய வேண்டும் என்பதோடு எங்களுடைய செயற்பாடுகளுக்கு மாகாணசபை பூரண ஒத்துளைப்பினை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த விசாரணைக்குழுவினால் முடிவாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கௌரவ முதலமைச்சர் அவர்கள் அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையினை ஒருபுறத்தில் வைத்து விட்டு எங்களையும் தண்டிப்பது போன்று எங்களையும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற  நிலைப்பாட்டினை எடுத்த சமயத்தில் தான் மாகாணசபையில் குழப்பம் விளைவிக்கப்பட்டது. தற்போது அந்த குழுப்பநிலை ஒரளவு சீர்செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் ஒரு சாதகமான நிலை வருகின்ற சமயத்தில் நாங்கள் இரண்டாக பிரிவதும் மூன்றாக பிரிவதும் அல்லது பல கூறுகளாக பிரிந்து வரக்கூடிய அந்த நன்மைகளை கடந்த காலத்திலேயே வாரலாறு சொல்கின்றது. பல தடவைகள் நாங்கள் கோட்டை விட்டு இருக்கின்றோம் அல்லது கைநழுவி செல்ல விட்டுள்ளோம்.

என்ன அரசியல் தீர்வு வரப்போகின்றது என தெரியாமல் எழுந்தமானமான கருத்துக்களை கூறி தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக நிற்கும் அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடக்கூடாது. ஆகவே தான்  பல விதமான கருத்துக்களை எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூறிவரும் சமயத்தில் அமைதியாக அவற்றை செவிமடுப்பவர்களாக வீணான அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தாமல் நாங்கள் ஒற்றுமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக எங்களுடைய எதிர்கால சந்நதியேனும் இந்த மண்ணில் நின்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையினை எற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு இருக்கின்றது.

​எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பந்தன் ஐயாவினுடைய 16 வருட சர்வாதிகாரத்தினுள் தாங்கள் இருப்பதாக கூறியிருந்தார். அவர்களுடைய சர்வாதிகாரத்தினை நாங்கள் மறந்து விடவில்லை.

நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த சமயத்தில் எவ்வாறு சர்வாதிகாரிகளாக நடந்து கொண்டார்கள், அவர்கள் அடித்த நோ என்னும் எனக்கு மாறவில்லை, அவர்களுக்கு பயந்து நான் நான் நான்கரை மாதம் காட்டில் வசித்தேன், நான்கரை மாதம் மரத்தில் படுத்து தூங்கினேன். வவுனியாவிலிருந்து பட்டப்படிப்புக்காக கொழும்பு செல்லவேண்டியிருந்தது. இப்போது சர்வாதிகாரத்தை பற்றி கதைப்பவர்களுக்கு பயந்து நான் லோறியிலிலேயே மணல் ஏற்றும் தொழிலாளியாக  சாறத்தோடு அனுராதபுரத்தில் இறங்கி அங்கு தான் குளித்து உடைகளை மாற்றி விட்டு கொழும்பு சென்றேன். இவை அனைத்து எமது வாழ்வில் திரும்பி வரக்கூடாது நாங்கள் என்னும் மரணிக்கவில்லை எல்லோருடைய சர்வாதிகாரத்தினையும் அனுபவித்தவர்கள் இன்றும் இருக்கின்றோம்.

சம்பந்தன் ஐயா 16 வருடங்களாக சர்வாதிகாரியாக நடந்து கொண்டார் என்ற வார்தையினை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள் எங்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று எனக்கு தெரியும். அதை நான் மீண்டும் கிளற விரும்பவில்லை

இங்கு எத்தனை பேர் காணாமல் போணார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கொலை செய்தார்கள் , சுட்டுச்சுட்டு வீதியில் வீசினார்கள், கொள்ளையடித்தார்கள் , கப்பம் வாங்கினார்கள், இவ்வாறு நிறைய விடயங்களை செய்தார்கள்.

அவர்கள் இன்று சம்பந்தன் சர்வதிகாரி என கூறுவதற்கு தகுதியற்றவர்கள். இனிமேல் அவர்கள் அவ்வாறு கதைக்கக் கூடாது. இன்றும் சில அரசியல்வாதிகள் சம்பந்தன் ஐயா என கூறுவதற்கு கூட வாய் கூசுகின்றது. அவர்களுடைய  வயதில் அரவாசி வயது கூட இல்லாதவர்கள் சம்பந்தன் என கூறுகின்றார்கள். என மேலும் அவர் தெரிவித்தார்.