வவுனியாவில் கல்வியற்கல்லூரி மாணவர்களின் சமகால சர்வதேசம், நுண்ணறிவு நூல்கள் வெளியீடு!!

1696

 
வவுனியாவில் நேற்று (10.07.2017) மாலை 3.30 மணியளவில் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி மண்டபத்தில் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் கல்வியற்கல்லூரி மாணவர்களின் நூல்கள் நுண்ணறிவு, சமகால சர்வதேசம், ஆகிய இரு நூல்களும் அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஏஸ்.ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்களாக உப பீடாதிபதி க.சுவர்ணராஜா, சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், விரிவுரையாளர் க.குலரதன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், வரவேற்புரையை சு.டிலக்சன் தலைவர் தமிழ் மன்றம், ஏற்புரையை நூலாசிரியர்களான எ.எல்.எம்.அஸீம், செ.வாசுகி, நன்றி உரை செல்வி த. தர்சினி செயலாளர் தமிழ் மன்றம். ஆகியோர் கலந்துகொண்டதுடன் கல்வியற்கல்லூரி மாணவர்கள், நூலாசிரியர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.