வவுனியா அன்பகம் தொடர்பான விஷேட குழுவின் அறிக்கை கொழும்பிற்கு அனுப்பி வைப்பு : அரசாங்க அதிபர்!!

816

வவுனியா வேப்பங்குளம் அன்பக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஞர் ஒன்றினை கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார..

வேப்பங்குளம் அன்பகத்தில் கடந்த 29ம் திகதி மரணித்த சிறுமி தொடர்பாக பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் எனது அலுவல உத்தியோகத்தர்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து தனி விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த விசாரணையில் பிள்ளை கல்வி கற்ற பாடசாலை அதிபர், பிள்ளைகள், பிள்ளையின் உறவினர்கள் மற்றும் அன்பக பிள்ளைகளின் வாக்குமூலம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. அனைத்து விடயங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலமைக்காரியலயம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வேப்பங்குளம் அன்பக பிள்ளைகள் தொடர்பாக முடிவு எடுப்பதாகவும் மேலதிக தகவல்களை தற்போது வெளியிட  முடியாது எனவும்  தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக  ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களின் தரப்பு நியாயங்களையும் ஊடகங்கள் வெளிப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.