சென்னை சில்க்ஸ் : 600 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு!!

650

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 2ம் திகதி முதல் 19ம் திகதி வரை கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது.

கடந்த மாதம் 22ம் திகதி, ஆறாவது தளத்தில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி ஒன்று மீட்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தரைத்தளத்தில் பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. அதில் 600 கிலோ தங்க, வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.