வவுனியாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதிகளுடன் நீதிபதிகள் சந்திப்பு!!

545

 
​மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் யூலை 10ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதிஅரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று (12.07.2017) மாலை வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில்​ வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் எமர்ஷன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கலந்துரையாடலில் தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பில் விஷேடமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.