வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொகுதி அமைச்சர் ரவூக் ஹக்கீமால் திறந்து வைப்பு!!

959

 
வவுனியாவிற்கு விஜயம் செய்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ரவூக் ஹக்கீம் பல பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத் தொகுதிகளை திறந்து வைத்தார்.

இன்று (12.07.2017)காலை முதல் வவுனியாவின் சின்னசிப்பிக் குளம் , வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம், கோவில்குளம், தேசிய கல்வியற் கல்லூரி ஆகிய பகுதிகளில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைச்சினால் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொகுதியை அமைச்சர் ரவூக் ஹக்கீம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

சிறுநீரக நோய் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு அனைவருக்கும் சுத்தமான நீர் என்னும் நோக்கத்தின் கீழ் அமைச்சினால் பல்வேறு பகுதிகளிலும் நீர் விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ரம்சின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.